Total Pageviews

Tuesday, June 27, 2017

27.06.17 இந்த வார நாட்குறிப்பு: ஜி.எஸ்.டி பற்றி

27.06.17 இந்த வார நாட்குறிப்பு: ஜி.எஸ்.டி பற்றி

ஜூலை 1 முதல் ஜி.எஸ்.டி அமுலுக்கு வருவது நிச்சயம் என்றாகிவிட்ட நிலையில் பாமரத்தனமான ஒரு சில கேள்விகளுக்குப் பதில் கிடைக்குமா?
          1.     இனி எல்லா மருத்துவர்களும், மருத்துவ மனைகளும் வாங்குகிற கட்டணத்துக்கு உண்மையான ரசீது கொடுப்பார்களா?
          2 .   பல பள்ளிகள், கல்லூரிகள் மாணவர்களிடம் பல விதங்களில் கட்டணங்கள் வசூலிப்பது நின்று விடுமா அல்லது வசூலிக்கும் கட்டணங்களுக்கு ரசீது கொடுக்கப்படுமா?
          3.     இனி, காலி நிலங்களையோ அல்லது வீடுகளையோ விற்கும் பொழுதும் வாங்கும் பொழுதும் பரிமாற்றமாகும் முழுப் பணமும் பத்திரங்களில் குறிப்பிடப்படுமா அல்லது முன்னம் போல் 60% ரொக்கமாக பணம், 40% வங்கி காசோலையாக பெறப்படுமா? 60% கணக்கில் வராது.
          4.     பெரிய பலசரக்குக் கடைகளில் இன்னமும் ஒரு அழுக்குத் தாளில் வாங்கிய பொருளுக்கு கையெழுத்து புரியாதமாதிரி ஒரு பில் கொடுத்து வருகிறார்களே, இது தொடருமா?
          5.     பல ஹோட்டல்களில், விடுதிகளில் ரொக்கப் பணமாகவே கொடுப்பதற்கு வற்புறுத்துவதை நிறுத்தி விடுவார்களா?
  
அடிப்படையில் எந்த விதத்தில் ஜி.எஸ்.டி கறுப்புப் பணம் புழல்வதைத் தடுக்கும் என்று புரியவில்லை.

விஷயம் அறிந்தவர்கள் விளக்குவார்களா?


No comments:

Post a Comment