Pages

Sunday, July 13, 2014

எங்கள் டென்வர் பயணம் - OUR TRIP TO DENVER, COLARADO



டென்வர் (DENVER), அமெரிக்காவின் கொலரேடோ (COLARADO) மாநிலத்தின் தலைநகரமும் மிகப் பெரிய நகரமும் ஆகும். ராக்கி மலைத்தொடரின் (ROCKYMOUNTAINS) கிழக்கு அடிவாரத்தில் 12 மைல் தொலைவில் அமைந்த இந்த நகரம் ‘மைல்-உயர’ நகரம் (MILE-HIGH CITY) என்ற செல்லப் பெயரையும் கொண்டது. ஏனென்றால், இந்த நகரம் கடல் மட்டத்திலிருந்து ஒரு மைல், அதாவது 5280 அடி உயரத்தில், அமைந்துள்ளது. அமெரிக்காவில் மிக உயரத்தில் அமைந்த பெரிய  நகரமும் இதுதான்.
ராக்கி மலைத் தொடரின் தெற்குப் பகுதியில் உற்பத்தியாகும் கோலரேடோ நதி 1450 மைல் தூரம் கொலரேடோ (COLARADO), யூடா (UTAH), நேவதாவின் (NEVADA) எல்லை, அரிசோனா (ARIZONA) மாநிலங்கள் வழியாக ஓடி மெக்சிகோ (MEXICO) நாட்டுக்குள் புகுந்து கலிஃபோர்னியா வளைகுடாவில் (CALIFORNIA BAY) கடலில் கலக்கிறது. செல்கிற வழியில் பல பள்ளத்தாக்குகள், மலைக் கணவாய்கள், ஏரிகள், அணைக்கட்டுகள். க்ளென் மலைக் கணவாய் (GLEN CANYON), கிராண்டு மலைக் கணவாய் (GRAND CANYON) முக்கியமானவை.
வட அமெரிக்காவில் ராக்கி மலைத்தொடர் ஒரு முக்கியமான மலைத்தொடர். சுமார் 3000 மைல் நீளம். மேற்கு கனடாவிலிருந்து அமெரிக்காவின் நியூ மெக்சிகோ வரை. சுமார் 80 முதல் 55 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இந்த மலைத்தொடர் தோன்றியது என்று நம்புகிறார்கள். சுற்றுலாப் பயணிகளுக்கு மிக முக்கியமான இடம். ஆல்பெர்ட் மலை (MOUNT ALBERT) இதன் மிக உயரமான சிகரம். 14440 அடி. இந்த மலையின் பல பகுதிகளில் செம்பு, ஈயம், தங்கம், மாலிப்டெனம், வெள்ளி, டங்க்ஸ்டன், துத்த நாகம் போன்ற பல கனிமப்பொருட்கள் கிடைக்கின்றன. ஒரு சில இடங்களில் நிலக்கரி, இயற்கை எரிவாயு, பெட்ரோலியம், ஷேல் வாயுவும் கிடைக்கிறது. வடக்குப் பகுதியில் YELLOW STONE NATIONAL PARK, GRAND TETON NATIONAL PARK இயற்கை வெந்நீரூற்றுக்களுக்கு மிகவும் பிரபலமானது. (இந்தப் பகுதிகளுக்கும் ஐந்தாறு வருடங்களுக்கு முன்பு போய் வந்திருக்கிறோம்.)
அமெரிக்காவில் 14000 அடி உயரத்தில் இருக்கும் 53 மலைச் சிகரங்களில் ஏவன்ஸ் மலை (MOUNTEVANS) ஒரு முக்கியமான மலை. இதுவும் ராக்கிஸின் ஒரு பகுதிதான். 14265 அடி உயரம் வரை செல்வதற்கும் அழகான பாதை அமைத்திருக்கிறார்கள். சிகரத்துக்கு மிக அருகே சம்மிட் ஏரி (SUMMIT LAKE). மலைத்தொடரை ஏரியின் தண்ணீர் பிரதிபலிக்கிறது.
நாங்கள் தங்கியது 5858 அடி உயரத்தில் பெரிய தாம்சன் (BIG THOMSON RIVER) நதிக்கரையில் அமைந்திருந்த எஸ்டிஸ் பார்க் என்ற இடத்தில் (ESTES PARK).
எங்கள் பயணத்தின் முதல் நாள் ஏவன்ஸ் மலையில்.

இரண்டாவது நாள் ராக்கிஸின் ஒரு பகுதியான FOREST CANYON OVERLOOK POINT-ல்.
மூன்றாவது நாள் BEAR LAKE பகுதியில்.
சென்ற வழியெல்லாம் இடங்களிலெல்லாம் கண்கொள்ளா
இயற்கை அழகு.
நான்காவது நாள் எஸ்டிஸ் பார்க் ஊருக்குள்ளே அமைந்த ஏரிக்கரையில். சைக்கிள் படகு, சைக்கிள், சிறுவர்கள் விளையாடும் பார்க், சாப்பாடு என்று கழிந்தது. 


இறுதி நாள் டென்வர் மிருக காட்சி சாலையில்.
இயற்கையான இடங்களைப் பேணிக்காப்பதிலும், அந்த இடங்களுக்கு சென்று வருவதற்கு சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதிலும், உள்கட்டமைப்புகளை உருவாக்குவதிலும் அமெரிக்காவுக்கு நிகர் அமெரிக்காதான். இவர்களிடமிருந்து நாம் நிறையக் கற்றுக் கொள்ளவேண்டும். தேவையில்லாத எதையெதையோ கற்றுக் கொள்கிறோம். அமெரிக்காவில் பல இடங்களை சுற்றிப் பார்த்திருக்கிறோம்.
இயற்கையாக அழகாக இருக்கும் இடங்களுக்கு இந்தியாவும் எந்த விதத்திலும் குறைந்ததில்லை.
(LAKE MANASAROVAR, KAILASH)
நமது இமயமலை ஒன்றே போதும். ஆனால், போய் வருவதுதான் சிரமமானது.  நமது நெடுஞ்சாலைகள் நமக்கு கண்ணீரை வரவழைக்கும். சுற்றுலாத் துறைக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவம் மிகக் குறைவு. நிறைய அன்னியச் செலவாணி சம்பாதித்துத் தரக்கூடிய ஒரு துறை. ஏனோ, நமது புறக்கணிப்பினால் சீரழிந்துகொண்டிருக்கிறது என்பதை நினைக்கும்பொழுது மிகவும் வருத்தமாக இருக்கிறது. இந்தியாவிலும் பல இடங்களைச் சுற்றிப் பார்த்திருக்கிறேன் என்ற முறையில் இதைச் சொல்கிறேன்.
அடுத்து எங்கு போகலாம் என்பதைப் பேசினால் என் மனைவி அடிக்க வருகிறாள்……

எங்கள் டென்வர் பயணத்தின் மேலும் புகைப்படங்களை என்னுடைய கூகுள்+ ல் பார்க்கலாம்.



No comments:

Post a Comment