பருத்தியின்
கதை
முன்னுரை
இலை, தழைகளை உடம்பில் சுற்றிக்கொண்டு, காய், கனிகளை பச்சையாக உண்டு காடுகளில் சுற்றித்திரிந்து வந்த மனித குலத்தை இன்றைய நாகரீகத்துக்கு எடுத்து வந்ததில் பருத்தி ஆடைக்கு மிகப்பெரிய பங்குண்டு. பருத்திச் செடிகளிலில் உண்டாகும் விதைகளின் மேற்பாகத்தில் பாதுகாப்பாக மூடியிருக்கும் ஒரு கூட்டில் வளர்ந்திருக்கும் மென்மையான மயிர்கொத்து போன்ற, செல்லுலோஸால் ஆன ஒரு இழைதான் பருத்தி. இயற்கையாகவே இந்த கூடுகள் காற்றில் பறந்தும், மற்றும் பல வழிகளிலும் தன் விதைகளை பரப்பச்செய்யக்கூடிய தன்மையுடையவை. விதவிதமான பருத்திப் பயிர்கள் மிக அதிக அளவில் மெக்சிகோவிலும், ஆஸ்திரேலியாவிலும் மற்றும் ஆஃப்ரிக்காவிலும் காணப்படுகின்றன.
இயற்கையாக
கிடைக்கும்
இழைகளில்
பருத்தி
மிக
முக்கியமானது.
25 கோடி
மக்களின்
வயிற்றுப்
பிழைப்பை
பருத்தித்
தொழில்
காப்பாற்றி
வருகிறது.
இன்று
உலகம்
முழுவதும்
25 மில்லியன்
டன்
அளவுக்கு
(110 மில்லியன்
மூட்டைகள்)
பருத்தி
ஆண்டுதோறும்
உற்பத்தியாகிறது.
உலகிலேயே
மிக
அதிகமாக
பருத்தியை
ஏற்றுமதி
செய்யும்
நாடு
அமெரிக்கா.
சைனா
தன்
உற்பத்தியை
உள்நாட்டிலேயே
பயன்படுத்திக்கொள்கிறது.
ஒரு
பருத்தி
மூட்டை
என்பது
17 கன
அடி
அளவும்
500 பௌண்ட்
எடையும்
கொண்டது.
பருத்தியின் சரித்திரம்
எப்பொழுதிலிருந்து பருத்தி பயன்பாட்டில்
இருந்து வந்திருக்கிறது என்பது சரியாகத் தெரியவில்லை. மெக்ஸிகோ நாட்டிலுள்ள சில
குகைகளை ஆராய்ச்சி செய்யும்பொழுது 7000 ஆண்டுகள் பழமையான, பருத்தியால் செய்யப்பட்ட
பொருட்களையும் பருத்தித் துணிகளின் துண்டுகளையும் கண்டிருக்கிறார்கள். பாகிஸ்தான்
பகுதியில் சிந்து சமவெளி பள்ளத்தாக்கில் சுமார் 3000 ஆண்டுகளூக்கு முன்பேயே
பருத்தி உற்பத்தி செய்ததற்கும், பருத்தியிலிருந்து நூலெடுத்து ஆடைகளாகத்
தயாரிக்கப்பட்டிருந்ததற்கும் ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. அதே காலங்களில்
எகிப்து நாட்டில் நைல் பள்ளத்தாக்கில்
பருத்தி ஆடைகள் அணிந்திருந்திருக்கிறார்கள் என்பதற்கான சான்றுகளும்
கிடைத்திருக்கின்றன. அரபுநாட்டு வியாபாரிகள் பருத்தியை ஐரோப்பாவுக்கு கி.பி
800-களில் எடுத்துச்சென்று விற்றிருக்கிறார்கள். 1492-ல் அமெரிக்காவுக்கு வந்த
கொலம்பஸ் பஹாமா தீவுகளில் பருத்தி விளைந்திருப்பதைக் கண்டிருக்கிறார். சுமார்
கி.பி 1500-ல் உலகம் முழுவதும் பருத்தியை ஆடைகளுக்காக பயன்படுத்தியிருக்கிறார்கள்.
அமெரிக்காவில் 1556-ல் ஃப்ளோரிடாவிலும், 1607-ல் விர்ஜீனியாவிலும் பருத்தியை
பயிரிடத் தொடங்கியிருக்கிறார்கள். 1730-ல்
முதன் முதலாக இங்கிலாந்தில் பருத்தியை இயந்திரங்களின் உதவியால் நூற்றிருக்கிறார்கள்.
1793-ல் அமெரிக்காவில் மஸாச்சுஸெட்ஸ் என்ற இடத்தில் வசித்துவந்த எலி விட்னி என்பவர் பருத்தியை பிரித்தெடுக்கும் ஜின்னிங் இயந்திரத்தை கண்டுபிடித்திருக்கிறார். ஜின்னிங் இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட
பிறகு பருத்தி உற்பத்தி மிக அதிக அளவில் வளர்ந்தது. பத்து வருடங்களில் அமெரிக்காவின் பருத்தி உற்பத்தி 150000 டாலர் மதிப்பிலிருந்து 8 மில்லியன் டாலர் அளவுக்கு வளர்ந்தது.
பருத்தியின்
பயன்கள்
பருத்தியிலிருந்து நெய்யப்பட்ட துணிகளை நாம் பல விதங்களில் சொந்த உபயோகத்திற்கும் தொழிற்சாலைகளின் உயயோகத்திற்கும் பயன்படுத்துகிறோம். துணிமணிகள் உற்பத்தியைத் தவிர மீன் வலை,
காஃபி வடிகட்டிகள், கூடாரங்கள், வெடிமருந்துகள், காகிதம் போன்ற மற்ற பல
தொழில்களிலும் பருத்தி பயன்படுகிறது.
பருத்திப் பயிரின் எல்லா பாகங்களும் ஏதோ ஒரு விதத்தில் பயனுள்ளதாக இருக்கின்றன. முக்கியமாக, பருத்திக் கொட்டையின் நுனியில் வளர்ந்திருக்கும் குறுகிய நீளமேயுள்ள இழைகள் (லின்டுகள்) பிளாஸ்டிக் தயாரிப்பிலும், வெடிமருந்துகள் தயாரிப்பிலும் தேவையான செல்லுலோஸை கொடுக்கிறது. இந்த இழைகள் உயர் ரக காகிதம் தயாரிப்பிலும், மெத்தை, படுக்கை வகைகளிலும் பயன்படுகிறது.
பருத்திக்கொட்டையை பிழிந்தெடுத்து எண்ணெய், மாட்டுத்தீவனம், மீன்களுக்கான உணவு, உமி போன்றவற்றை தயாரிக்கிறார்கள். பருத்திச் செடியின் தண்டு, இலை போன்றவை உரமாகவும் பயன்படுகின்றன.
பருத்திப் பயிருக்குத்
தேவையான பருவ நிலை
பருத்திப் பயிருக்கு நீண்டகால, பனியில்லாத, வறண்ட பருவநிலையும், அதிக அளவு சூரிய
வெளிச்சமும், சுமாரான மழை நீரும் தேவைப்படுகிறது. விளைவிக்கும் மண் கனமானதாக இருக்க
வேண்டும். பொதுவாக வறண்ட, பூமியின் வடக்கிலும் தெற்கிலும் உள்ள வெட்பமண்டலப் பகுதிகள்
பருத்தி விளைச்சலுக்கு உகந்தவை. தற்போது மழை குறைவான பகுதிகளில்கூட நீர்ப்பாசன வசதி
மூலமாக பருத்தியை உற்பத்தி செய்கிறார்கள். பொதுவாக உப்பையும், வறண்ட பருவநிலைகளையும்
பருத்தி தாங்கிக்கொள்வதால், உலர்ந்த, வறண்ட பகுதிகளில் பருத்தி உற்பத்தி செய்வது வழக்கமாகியிருக்கிறது.
பருத்தியை மிக அதிகமாக உற்பத்தி செய்யும் நாடுகள்: சைனா,
இந்தியா, வட அமெரிக்கா, பாகிஸ்தான், பிரேசில். பிற நாடுகள் உஜ்பெகிஸ்தான்,
ஆஸ்திரேலியா, துருக்கி. மற்றும் துருக்மெனிஸ்தான்.
ஜின்னிங் இயந்திரத்தின் கதை:
பருத்தி தொழிலின் வளர்ச்சியில்
ஜின்னிங் இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டது ஒரு முக்கியமான
கட்டம். பருத்திப் பயிரின் அறுவடைக்குப் பிறகு பருத்தியையும் பருத்திக்கொட்டையையும் பிரிப்பதற்கு இந்த இயந்திரம் உதவுகிறது. 14-ஆம் தேதி
மார்ச், 1794-ல் அமெரிக்கத் தொழிற்ப்புரட்சி காலங்களில் எலி விட்னி என்பவர் இதைக் கண்டுபிடித்தார்.
இந்த இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டபின் வட அமெரிக்காவின் தெற்குப் பகுதிகளில் பருத்தித்
தொழில் மிக வேகமாக வளர்ந்தது என்றாலும் பருத்தியைப் பொறுக்குவதற்கு மிக அதிகமாக கூலியாட்கள்
தேவைப்பட்டதால் அடிமைத் தொழில் தழைப்பதற்கும் காரணமாகியது. ஜின்னிங் இயந்திரம் பருத்தியின் சரித்திரத்தை மாற்றியமைத்தாலும்
அதைக் கண்டுபிடித்த விட்னி அவரின் கண்டுபிடிப்பால்
மிகப் பெரிய லாபம் எதையும் அடையவில்லை. பிற்பாடு ஏற்பட்ட தொழில்நுட்ப முன்னேற்றங்களால்
ஜின்னிங் இயந்திரத்தின் வடிவமும் பயன்பாடும் பல விதங்களில் மாறிவிட்டது. பருத்தியையும்
கொட்டையையும் பிரிக்க மட்டுமே பயன்படுத்தப்பட்ட இந்த இயந்திரம் பருத்திப் பஞ்சை சுத்தம்
செய்வதற்கும் அதைப் பொதிகளாகக் கட்டுவதற்கும்கூட தற்பொழுது பயன்படுகிறது.
பருத்திக்கொட்டை:
பருத்திப் பயிரை ஜின்னிங் இயந்திரத்தைக்கொண்டு
அறுவடை செய்யும்பொழுது பருத்திப் பஞ்சை விட பருத்திக்கொட்டை மிக அதிகமாக
கிடைக்கிறது. 480 பௌண்டு எடையுள்ள ஒரு பொதியை தயாரிக்கும்பொழுது, சுமார் 700
பௌவுண்ட் எடையுள்ள பருத்திக்கொட்டை
கிடைக்கிறது. 1980-களில்தான் பருத்திக்கொட்டை மிருகங்களுக்கு ஒரு நல்ல தீவனமாகக்
கண்டறியப்பட்டது. கொட்டையின் விதையில் புரத சத்தும், அதன் மேல்தோலில் காணப்படும்
மெல்லிய முடிபோல இருக்கும் நூலில் ஃபைபர் சத்துக்கான செல்லுலோஸும் கிடைக்கிறது.
பால் உற்பத்தியாளர்கள் பருத்திக்கொட்டையை சத்துள்ள ஒரு மாட்டுத்தீவனமாக பயன்படுத்துகிறார்கள்.
கொழுப்புச்சத்து மிகுந்த பால் உற்பத்தியும் அதிகமாகிறது. பருத்திக் கொட்டையை தீவனமாக அப்படியே மற்ற தீவனங்களோடு
சேர்த்துக் கொடுத்துவிடலாம்.
பருத்தித் தொழிலின் வளர்ச்சி
18-ஆம் நூற்றாண்டில்
இங்கிலாந்தில்
நடந்த
தொழிற்புரட்சியின்
போது,
பருத்தி
ஏற்றுமதிக்கு
மிகப்
பெரிய
வரவேற்பு
கிடைத்தது.
1738-ல்
இங்கிலாந்தில்
பர்மிங்காமைச்
சேர்ந்த
லூயிஸ்
பால்
மற்றும்
ஜான்
வயட்
என்ற
இருவரும்
ஒரு
உருளை
நூற்பு
இயந்திரத்திற்கு
காப்புரிமை
பட்டயம்
பெற்றனர்.
எலி
விட்னி
1793-ல்
ஜின்னிங்
இயந்திரத்தைக்
கண்டுபிடித்த
பின்பு
பருத்தித்
தொழில்
மேலும்
முன்னேற்றம்
கண்டது. இங்கிலாந்திலுள்ள
மான்செஸ்டர்
நகரம்
பருத்தி
தொழிலுக்கு
மிகப்
பிரபலமானது.
லன்காஷேர்
நகரம்
துணிகள்
உற்பத்திக்கு
மிகப்
பிரபலமானது.
இங்கிலாந்தின்
கப்பல்கள்
மூலமாக
அவர்கள்
காலனியாட்சியில்
இருந்த
இந்தியா,
மேற்கு
ஆப்பிரிக்கா,
சைனா
நாடுகளுக்கு
ஏற்றுமதி
செய்தது. 1840-வாக்கில்
இந்தியாவால்,
தொழில்மயமாக்கப்பட்ட
இங்கிலாந்திற்குத்
தேவையான
பருத்தியை
ஏற்றுமதி
செய்யமுடியவில்லை.
அமெரிக்காவில்
விளைந்த
உயர்ரகப்
பருத்தியின்
போட்டியும்
இருந்ததால்
இங்கிலாந்தின்
வியாபாரிகள்
அமெரிக்காவிலும்
கரீபியன்
தீவுகளிலும்
பருத்தித்
தோட்டங்களிலிருந்து
பருத்தியை
நேரடியாக வாங்கத்
தொடங்கினர்.
அமெரிக்க உள்நாட்டுப் போரின் போது, அமெரிக்காவின் தென் மானிலங்கள் தங்களை அங்கீகரிக்க இங்கிலாந்தை நிர்பந்தப்படுத்துவதற்காக பருத்தி ஏற்றுமதியை தடை செய்தனர். அதனால் இங்கிலாந்தும் ஃப்ரான்ஸும் எகிப்தின் பருத்தியை வாங்கத்தொடங்கினர். மிகப்பெரிய அளவில் முதலீடும் செய்தனர். ஆனால், அமெரிக்காவின் உள்நாட்டுப் போர் முடிந்த பிறகு இங்கிலாந்து, ஃப்ரான்சு நாட்டு வியாபாரிகள் எகிப்தின் பருத்தியை கைவிட்டுவிட்டு மீண்டும் விலை குறைவான அமெரிக்க பருத்திக்கு மாறினர். இதனால், 1865-ல் எகிப்து அரசு திவாலானது.
அதே நேரத்தில், இந்தியாவில் பருத்தியின் உற்பத்தியை பன்மடங்கு உயர்த்துவதற்கான ஏற்பாடுகளையும் இங்கிலாந்து செய்தது. மேலும் இந்தியாவிலேயே பருத்தி துணி தயாரிப்பதை தடை செய்தும் வரிகளைக் கூட்டியும் இந்தியா அதிக அளவில் துணி உற்பத்தி செய்யமுடியாத ஒரு நிலையைத் தோற்றுவித்தது.
இந்தியாவிலிருந்து இழைகளை இங்கிலாந்துக்கு எடுத்துச் சென்று லன்காஷயரில் துணியாக்கி மீண்டும் இந்தியாவுக்கே அதிக லாபத்தில் விற்றது. இதை மஹாத்மா காந்தி கடுமையாக எதிர்த்துப் போராடினார்.
அமெரிக்காவிலோ, தென்மானிலங்களில் அடிமைகளை வேலைவாங்கி உற்பத்தி செய்த பருத்தி வட மானிலங்களில் இருந்த வியாபாரிகளை கொழுத்த பணக்காரர்களாக்கியது. 20-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இயந்திரமயமாக்குதலால் பருத்தித் தொழிலில் வேலைவாய்ப்புக்கள் வேகமாக வீழ்ந்தன. இன்றும் அமெரிக்காவின் தென் மானிலங்கள் உலகளவில் மிகப் பெரிய ஏற்றுமதி மையங்களாக இருக்கின்றன. உலகளவில் அமெரிக்காவின் நீள வகையான பருத்திதான் விற்பனையில் முன்னணியில் நிற்கிறது.
பூச்சிக்கொல்லி:
உலகிலேயே மிக அதிகமாக, பூச்சிகளுக்கு அடிமையாகும் பயிர்களில்
பருத்தியும் ஒன்று. ஏழை நாடுகளில், விவரம் அறியாமல் மிக அதிகமாக பூச்சிக் கொல்லி மருந்துகள்
பயன்படுத்துவதின் எதிர் விளைவுகளில் ஒன்று: பல இடங்களில் உணவுப்பொருட்கள் மீதும் இந்த
மருந்துகள் அடிக்கப்பட்டு அதை உட்கொண்டவர்கள் துர்மரணம் எய்தது முக்கியமானது. இதைத்
தவிர குழந்தை பிறப்பிலே ஏற்படும் பல கோளாறுகளும் விஷம் கலந்த உணவு உண்பதால் ஏற்படும்
பிற தீவிர விளைவுகளும் அடங்கும். பருத்திக்கு இயற்கை உரங்களையும் பயன்படுத்தலாம்தான்.
ஆனால், பயிரடப்படும் நிலம் குறைந்தது மூன்று வருடங்களுக்கு எந்தவிதமான ரசாயனப் பொருட்களும்
பயன்படுத்தாத இடமாக இருக்க வேண்டும். இந்த மூன்று வருடங்களில் உற்பத்தி 50 சதவிகிதமாவது
குறைந்துவிடும். மேலும் இயற்கை உரங்களைப் பயன்படுத்தி விளையும் பருத்திக்கு கிடைக்கும்
20 சதவிகித உயர் விலையும் கிடைக்காது.
பி.டி.பருத்தி:
பருத்திச் செடியை பல பூச்சிகள் எளிதாகத் தாக்க முடிவதால் பொதுவாக பூச்சிக்கொல்லிகள், செயற்கை உரங்கள், களைக்கொல்லிகளை மிக அதிகமாக பயன்படுத்த வேண்டியிருக்கிறது.
பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டைத் வெகுவாகத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்டது (மரபணு மாற்றப்பட்ட) ஜி.எம் பருத்தி என்று கூறுகிறார்கள். மரபணு ‘கோடிங்’ முறையில் இயற்கையாகவே தன் திசுக்களில் பூச்சிக்கொல்லியை உற்பத்தி செய்துகொள்ளும் தன்மை பி.டி.பருத்திக்கு உண்டு. இதனால், பெரும்பாலான பகுதிகளில் பருத்தியைத் தாக்கும் ஆர்லேபிடொப்டெரான் என்ற பூச்சி கொல்லப்படுகிறது. இருந்தும், சில பூச்சிகளுக்கு இன்னும் மருந்து பயன்படுத்தவேண்டியிருக்கிறது.
இந்தியாவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தியின் உற்பத்தி 2002-ல் 50000 ஹெக்டேராக இருந்தது. 2011-ல் 10.6 மில்லியன் ஹெக்டேராக உயர்ந்திருக்கிறது. இந்தியாவில் பருத்தி 12.1 மில்லியன் ஹெக்டேரில் வளர்க்கப்படுகிறது (2011) இதனால் மிக அதிகமான நிலப்பரப்பில் ஜி.எம்.பருத்தி உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா இருக்கிறது.
இதனால் பருத்தி விளைவிக்கும் விவசாயிகளின் வாழ்க்கைத்தரம், லாபம், உற்பத்தி எல்லாமே உயர்ந்திருப்பதாக சில ஆய்வுகள் கூறுகின்றன.
பருத்தித் தொழிலுக்குப் போட்டி:
1890-களில் ரேயான் இழையை உருவாக்கும் முறை ஃப்ரான்ஸ் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இயற்கையாகக் கிடைக்கும் செல்லுலோஸிலிருந்து ரேயான் எடுக்கப்படுகிறது. ரேயான் செயற்கை இழையல்ல. ஆனால், இதை தயாரிக்க ஒரு விரிவான செயல்முறை தேவைப்படுகிறது. ரேயான் இழையைத் தொடர்ந்து செயற்கையாக ரசாயனப் பொருட்களிலிருந்து இழை தயாரிப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 1924-ல் அசிடேட் இழை அறிமுகப்படுத்தப்பட்டது. 1936-ல் டியூபோன்ட் என்ற அமெரிக்க நிறுவனம் பெட்ரோலிய ரசாயனப் பொருட்களிலிருந்து நைலான் இழையைத் தயாரிக்கும் முறையை அறிமுகப்படுத்தியது. 1944-ல் அக்ரைலிக் இழையையும் அறிமுகப்படுத்தியது.
1950-களில் பாலியெஸ்டரும் அறிமுகப்படுத்தப்பட்டபோது பருத்தி ஆடைகளுக்கு கடுமையான போட்டி ஏற்ப்பட்டது.
1960-களுக்குப் பிறகு பாலியெஸ்டரின் பயன்பாடு மிகப் பரவலாகி பருத்தி ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கு மிகப் பெரும் சவாலாக இருந்தது. நிகாராகுவா போன்ற மத்திய அமெரிக்க நாடுகள் மிகப் பெரிய பொருளாதார சிக்கலில் மூழ்கின. பருத்தி உற்பத்தியில் முதலீடு செய்தவர்களைக் காப்பாற்றும் பொருட்டும், பருத்தி பயன்பாட்டை மேம்படுத்தும் பொருட்டும் பருத்தி ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு திட்டம் அமெரிக்காவில் பருத்தி உற்பத்தியாளர்களால் துவங்கப்பட்டது.
இந்த முயற்சியால் அமெரிக்கா உயர்ரக பருத்தி இழை உற்பத்தியில் இன்றும் முன்னணியில் நிற்கிறது.
உலகச்
சந்தையில் இன்று பருத்தி:
பருத்தி வியாபாரம் ஊடகச் சந்தையில் ஒரு முக்கியமான வியாபாரப் பொருள்.
உலகளவில் பருத்தி ஒரு முக்கியமான விளைபொருளாக இருந்தும். வளரும் நாடுகளிலுள்ள பருத்தி உற்பத்தியாளர்களுக்கு தகுந்த விலை கிடைப்பதில்லை, மற்ற வளர்ந்த நாடுகளுடன் போட்டியும் போடமுடிவதில்லை என்ற குறை பரவலாக இருக்கிறது. இதனால் அமெரிக்காவுக்கும் மற்ற பல நாடுகளுக்கும் பன்னாட்டு விவாதம் அடிக்கடி ஏற்ப்படுகிறது. இதில் முக்கியமானது அமெரிக்காவுக்கும் பிரேசிலுக்கும் இடையே ஏற்பட்ட விவாதம்,
2002 செப்டம்பர் 27 அன்று, அமெரிக்கா அதன் பருத்தி உற்பத்தியாளர்களுக்கு கொடுக்கும் மானியங்களையும், சலுகைககளையும் மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று பிரேசில் நாடு உலக வர்த்தக நிறுவனத்திடம் (WTO)
முறையிட்டது.
2004, செப்டம்பர் 8 அன்று, அமெரிக்கா தன்னுடைய சலுகைகளை பின்வாங்கிக்கொள்ள வேண்டும் என்று இந்தப் பிரச்சினையை பரிசீலித்த குழு தீர்மானித்தது. அதே நேரத்தில்,
அமெரிக்காவின் வியாபார உத்திகளை கண்டித்த பெனின், புர்கினா ஃபாசோ, சட், மாலி என்ற நான்கு மிகப் பின்தங்கிய நாடுகள் 2003-ல் நடந்த உலக வர்த்தக பேச்சுவார்த்தைகளில் பருத்தி உற்பத்தியை பாதுகாக்கும் ஒரு முனைப்பை அறிமுகப்படுத்தினர்.
பல வளரும் நாடுகளில் பருத்தியை கைகளாலேயே பறிக்கும் முறை தொடர்ந்து வருகிறது. அதனால், பருத்தி உற்பத்தியில் சிறார்களைப் பயன்படுத்துவது பற்றியும், பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டால் ஏற்படும் உடல்நலக் கோளாறுகளைப் பற்றியும் சில வளரும், பின் தங்கிய நாடுகளை மற்ற நாடுகள் குறை கூறுகின்றன.
இதில் முக்கியமானது உஜ்பெகிஸ்தான் பற்றிய ஒரு குற்றச்சாட்டு. உஜ்பெகிஸ்தான் மிக அதிக அளவில் பருத்தி ஏற்றுமதி செய்யும் ஒரு நாடு. இங்கு பருத்தி சேகரிப்பதற்காக பெரியவர்கள் சிறியவர்கள் என்று பாகுபாடில்லாமல் பலரையும் அதிபர் இஸ்லாம் கரிமோவ் அரசு பலவந்தமாக ஈடுபடுத்தி வருவதாகவும், பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தும் பள்ளி ஆசிரியர்களையும், மாணவர்களையும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்களையும் இப்படி பத்து லட்சத்துக்கும் மேலான மக்களை பருத்திக் காடுகளில் குறிப்பிட்ட அளவு இலக்கை எட்டுவதற்காக ஒவ்வொரு ஆண்டும் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்துவதாகவும், உலக நாடுகள் குற்றம் சாட்டுக்கின்றனர். மேலும் பருத்தி ஏற்றுமதியால் கிடைக்கும் லாபத்தை அரசே பயன்படுத்திக்கொள்வதாகவும் மக்களுக்காக அது எதையும் செய்வதில்லை என்றும் குற்றச்சாட்டு. இந்தப் போக்கை எதிர்த்து ஒரு பெரிய கையெழுத்து வேட்டையே உலகளவில் நடந்து கொண்டிருக்கிறது.
பருத்திப் பயிர் பொதுவாக உப்பை ஏற்றுக்கொள்வதால், நீர்ப்பாசன முறைகளில் பல முறைகேடுகள் நடப்பதாகவும் அதனால் உஜ்பெகிஸ்தான் போன்ற நாடுகளில் பாலைவனப் பகுதிகள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது..
பருத்தி விதைப்பது, அறுவடை, நூற்பு
பொதுவாக நான்கு வகையான பருத்திச் செடிகள் உண்டு:
1.
மத்திய அமெரிக்கா, கரீபியன் மற்றும் தெற்கு ஃப்ளோரிடா (அமெரிக்கா)வில் காணப்படும் மேல் நிலத்தில் வளரும் பருத்தி..உலக உற்பத்தியில் இது 90 சதவிகிதம்.)
2.
கூடுதலான நீளமுள்ள இழைகள் கொண்ட பருத்தி. வெட்பமண்டல பகுதிகளான தென் அமெரிக்காவில் காணப்படுகிறது (உலக உற்பத்தியில் 8 சதவிகிதம்)
3.
மரமாக வளரும் பருத்திச் செடிகள் இந்தியாவிலும் பாக்கிஸ்தானிலும் காணப்படுகிறது (2
சதவிகிதத்திற்கும் குறைவு)
4.
தெற்கு ஆப்பிரிக்காவிலும் அரபு நாடுகளிலும் காணப்படும் ஒரு வகை பருத்தி ((2 சதவிகிதத்திற்கும் குறைவு)
பழைய பருத்தி வகைகள் 1900-க்கு முன்பு அதிகமாக பயன்படுத்தப்பட்டன. வெள்ளை, காவி, ஊதா, மற்றும் பச்சை நிறங்களில் பொதுவாக பருத்தி தோன்றினாலும் மரபியல் மாறுதல்களால் வெள்ளைப் பருத்தி பாதிக்கப்படலாம் என்ற பயத்தினால் பருத்தி பயிரிடும் இடங்களை பிரித்து வைக்கிறார்கள்.
விதைப் பஞ்சை சரியாகப் பாதுகாக்க வேண்டும். மழை காலங்களில் ஈரப்பசை அதிகமானால் பஞ்சின் தரம் குறையும், நிறம் மாறும், அழுகவும் செய்யும். காற்று அதிகமானால் விதைப் பிரிவுகளிலிருந்து பஞ்சை விரியவைக்கும். விரிந்த பஞ்சிலிருந்து குறைவான லின்ட்டும், விதைகளுமே கிடைக்கும்.
மரபு வழியாக பயிரிடுபவர்கள்,
பருத்தி அறுவடையான பின்பு செடியின் தண்டை வெட்டியெடுத்து துண்டு துண்டாக்கிவிடுவார்கள். நிலத்துக்கு அடியிலிருக்கும் பகுதிகளை புரட்டியெடுத்துவிடுவார்கள். சில இடங்களில் தண்டை அப்படியே விட்டுவிடுவார்கள். கோடைகாலத்துக்கு முன்புள்ள இளவேனிற்காலத்தில் பல முறைகளில் பயிரிடுவார்கள். உழுதும், உழாமலும் விதைக்கக்கூடிய முறைகள்
நடைமுறையில் இருக்கின்றன. பயிரிட்ட இரண்டு மாதங்களில் பருத்திச் செடிகளில் பூப்பூக்கத்
தொடங்குகிறது. இன்னும் மூன்று வாரங்களில் பூ மலரத் தொடங்குகிறது. இதழ்கள் வெள்ளை நிறத்திலிருந்து மஞ்சள், பின்பு ஊதா, இறுதியில் கருஞ்சிவப்பு நிறத்துக்கு மாறுகிறது. இன்னும் மூன்று நாட்களுக்குப் பிறகு இந்தப் பூக்கள் கருகி கீழே விழத்தொடங்குகின்றன. பச்சை நிறத்தில் பருத்திக் குமிழ்கள் வெளியே தெரிகின்றன. இந்தக் குமிழுக்குள்ளே
ஈரப்பசையோடு கூடிய பஞ்சு வளரத்தொடங்கி வெளியே தெரிகின்றன. இந்தக் குமிழ்கள் பழுக்கத் தொடங்கிய பிறகு, காவி நிறத்துக்கு மாறுகிறது. சூரிய வெளிச்சத்தில் இந்த பஞ்சு இன்னும் விரிந்துகொடுத்து விதைப் பஞ்சு முழுவதுமாக வெடித்து பஞ்சு வெளியே வருகிறது. வளர்ந்த நாடுகளில் இயந்திரங்களின் மூலமாக அறுவடை செய்கின்றனர். அறுவடை செய்யப்பட்ட பருத்தி ஜின்னிங் இயந்திரம் மூலம் பருத்திப் பஞ்சாகவும், கொட்டையாகவும் தனித்தனியே பிரித்தெடுக்கப்பட்டு வெவ்வேரு செயல்முறைகள் மூலம் நூலாகவோ, துணியாகவோ, தீவனமாகவோ, எண்ணெயாகவோ மாற்றப்படுகிறது.
முடிவுரை
பருத்தி சம்பந்தப்பட்ட தொழில் இன்றைய உலகில் முன்னணியில்
நிற்கும் ஒரு தொழிலாக விளங்கி வருகிறது. கோடிக்கணக்கான ஆட்களுக்கு வேலை வாய்ப்புகளை கொடுத்திருக்கிறது அமெரிக்காவில் மட்டுமே 120 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள (ஒரு பில்லியன் என்பது இந்திய ரூபாய்க்கு 6000 கோடி) பருத்தி வியாபாரம் நடந்திருக்கிறது.
பருத்தியின் உற்பத்தியை பெருக்குவதற்கும், பருத்தியின் நலத்தை பாதுகாக்கவும்,
பருத்தி உற்பத்தி செய்யும் மக்களின் பொருளாதாரம் மற்றும்
வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தரமான பருத்தியை எல்லா இடங்களுக்கும் கொண்டுபோய் சேர்ப்பதற்கும் ஆராய்ச்சிகள் இன்னும் தீவிரமாக நடந்துகொண்டிருக்கின்றன.