Total Pageviews
Friday, April 22, 2016
Wednesday, April 20, 2016
My new book series: "I WANT TO KNOW ABOUT...INDIA, ITS STATES, AND IMPORTANT CITIES
I AM PROUD TO ANNOUNCE THAT ALL THE 5 VOLUMES OF "I WANT TO KNOW ABOUT...INDIA, ITS STATES, AND IMPORTANT CITIES" HAVE SINCE BEEN PUBLISHED WITH WWW.POTHI.COM.
I APPEAL TO PARENTS TO GIFT A BOOK TO THEIR CHILDREN.
Links to buy my books on www.pothi.com
https://pothi.com/pothi/book/ebook-t-n-neelakantan-i-want-know-about-india-its-states-and-cities
https://pothi.com/pothi/book/ebook-t-n-neelakantan-i-want-know-about-india-its-states-and-important-cities
https://pothi.com/pothi/book/ebook-t-n-neelakantan-i-want-know-about-india-its-states-and-important-cities-volume-3
https://pothi.com/pothi/book/ebook-t-n-neelakantan-i-want-know-about-india-its-states-and-important-cities-volume-4
https://pothi.com/pothi/book/ebook-t-n-neelakantan-i-want-know-about-india-its-states-and-important-cities-volume-5
Tuesday, April 19, 2016
Volume 5: I WANT TO KNOW ABOUT...INDIA, ITS STATES, AND IMPORTANT CITIES
I am quite proud to announce that the 5th and Final Volume of: "I WANT TO KNOW ABOUT...INDIA, ITS STATES, AND IMPORTANT CITIES" has since been published on www.pothi.com. This is a picture based e-book and is available for buying. Here is the link to the book:
https://pothi.com/pothi/book/ebook-t-n-neelakantan-i-want-know-about-india-its-states-and-important-cities-volume-5
Dear Parents, please gift a book today to your children and help them grow. Books are great gifts.
T. N. Neelakantan
https://pothi.com/pothi/book/ebook-t-n-neelakantan-i-want-know-about-india-its-states-and-important-cities-volume-5
Dear Parents, please gift a book today to your children and help them grow. Books are great gifts.
T. N. Neelakantan
Thursday, April 07, 2016
The FEAR that I experienced recently
The FEAR that I experienced recently
Fear is a fundamental emotion like LOVE. FEAR is also the opposite of LOVE.
Let us see how.
We love to have something; a natural feeling of desire to possess. Simultaneously, another feeling arises. What, if we are unable to get it? That is our FEAR. The FEAR that we may not have what we desire to have, or what we love to have.
We have something with us. It is in our possession. We love it. We love our possession. Simultaneously, another feeling arises in us. What, if we are unable to hold on to our possession? What, if we lose our possession? That is our FEAR. The FEAR that we might lose what we currently possess.
There are no other ways FEAR can arise.
I have been driving a car since 1976. I got my driving license without any meaningful testing. Thanks to our loose systems. As I had been visiting U.S.A almost every year during the last decade every time I traveled I took an International Driving Permit (IDP) from India, for any emergencies, though I drove a car only sparingly there. Generally, it is not difficult to get an IDP in India. However, the process of having to wait for the ever-not-available Regional Transport Authority (RTA) in his office could be frustrating. I must admit that once RTA has seen my passport, ticket, and visa, getting the IDP takes hardly a day, or so. After receiving my U.S. Green Card during 2015, I felt a U.S. driving license would be advantageous. Besides, the IDPs are valid for only one year at a time. To obtain a driving license in U.S, I must clear a written test and pass a road test. Here was my problem.
My fear. My fear of failing. My fear of losing my self-image as an unfailing man.
Let me explain it.
While in Dubai for nine years, I managed most of my commute using the public transport and taxis, which were quite convenient. I never felt the need for a car for myself. Moreover, obtaining a driving license in U.A.E was quite time-consuming and prohibitively costly. Only one out of four managed to pass the road test. Every time, you want to appear for a road test, you have to go through minimum hours of training with a training school. Normally, most people managed to get a driving license only after a couple of years’ of repeated frustrating attempts.
Subconsciously, I had always nursed a fear of failure, all through my life. I do not normally attempt anything unless I am reasonably sure that I wouldn’t fail. I prepare well and then only attempt anything. And, if I had failed once, I had not normally attempted it again. A childhood conditioning that ruled me all the time. I had always nourished my self-image as someone who never failed though reasonably I had never failed in my attempts because I prepared well. Yet, failures were there. I would focus on the significant ones.
Failure 1
Failing in the Rashtrabhasha examination conducted by the Hindi Prachar Sabha, when I was only in my 7th or 8th Standard in the school, I stopped making any further attempt to appear for the Hindi examination again.
Failure 2
Failing in the Commercial Law paper twice in the Second Group of CAIIB examination during the very first year after joining a public sector bank, even though I succeeded in passing the first group in one single attempt – a rare feat, those days – inhibited me writing the exam again for nearly four years. Only when the banks started awarding a salary increment for passing the CAIIB examination, I sat for clearing the one arrear paper, swallowing my pride, only to get the all-too-important thirty-rupees-a-month salary increment. And I passed, though I had only one-night preparation – much against my conscience - scoring just one mark above the minimum of 50 required to pass.
Failing is anathema to me.
Failure 3
I was inimical to any attempt to get a driving license in Dubai. Yet, one day, after eight years of my stay in Dubai, motivated by one of my colleagues, I enrolled myself for the driving test. I cleared the written test easily. I went with confidence for the first road test.
But, waiting for my name to be called, I suddenly developed cold feet.
‘What, if I fail?’
So, just before the test, I tried a few meditative relaxation techniques that I had learned, to contain my fear of failure. Probably, I went into a sleepy state that I went cold. I didn’t even notice that my name was being called by the inspector, for the road test.
A few minutes later, jolted by a rebuking call from the inspector, I rushed and sat in the test vehicle, along with three others. I was the second to be called.
Alas! I forgot all the fundamentals of proper driving (as per Dubai Traffic Department rules) and I sat frozen in the driver’s seat. (A similar thing had happened to me while writing my mathematics paper during the pre-board examination for my school finals, when I just managed to scrape through, though I scored 98% in the SSLC final examination.)
“Out…!” The inspector shouted by my side. “Talim…Talim…” (It means ‘go for the training again.’)
This time, I was more matured. A failure is not an end in life, I had realized. There is no prestige involved in one’s failure. Practice more. Practice makes one perfect. I recalled all the lessons I learned. I went for the training again and came back for the driving test after about three weeks.
Again, four of us got into the testing vehicle. Three in the back seat and one on the wheel, the inspector sitting in the front by the side of the driver. The three before me were failed. I was the last to be called to take the wheels. Thank God! That was a relief. The one-in-four formulae should work unless I drove awfully. I drove the vehicle the way I knew it. Finally, when we reached back the testing center he declared, ‘You pass.’
What a great relief! I got my driving license in Dubai. An achievement.
However, I never bought a vehicle in Dubai, and I managed my work the same way I had managed during the previous 8 years. Driving License was just a status symbol for me!
Failure No. 4
Finally, coming back to my recent experience of FEAR.
As I decided to take a driving license in the U.S, there was no escape from going through a driving test. Three weeks back, I procured a Driver License Manual from the department, immediately after registering myself as a candidate for the driving test. I went through the Manual book meticulously, at least, three times as though I was preparing for my college examination. I couldn’t afford to fail. ‘I can’t take chances with a written test.’
Thank God! I passed the written test with 22 right answers out of 24. (Minimum was 20 out of 24)
I signed up for the road driving test for the same day, quite confident that I would pass. Just to be sure, I practiced driving the car for about an hour before the test. I went for the test. I drove the vehicle as the inspector kept giving me instructions. The habits ingrained in my subconscious, resulting from my driving a car for more than 30 years back in India were hard to give up. In the end, the inspector failed me at least on two counts: failure to give indicator signals, using brakes too often and not sufficiently noticing the cross-traffic at the signals. He advised me to work on them again and come back. My pleading with him that I had a long, thirty-years-of-safe-driving-experience back in India, didn’t cut any ice with him.
Another appointment for the road test was fixed for the next Friday. I hardly got any opportunity to try my driving skills during the intervening time.
“What has changed?’ the lady inspector asked me, looking at my previous test result papers.
“Nothing,” I replied, soberly.
‘Let us see,’ was all she said, as she sat by my side and asked me to drive.
Turn left…turn right…go into the next road on the right…exit on your left…
I followed mechanically, butterfly in my stomach all the time, a kind of queasy feeling constantly unsettling me.
‘What, if I fail again?’ The usual fear of failure was churning my stomach.
I was afraid they could fail me again, regardless of my long safe driving experience back in India. In U.S, you must follow the rules, strictly as per books. Negative marks for every mistake. You cross a threshold limit, you fail.
I wanted the driving license desperately. I can’t fail! Not that, hell will break out if I don’t get it!
FEAR…FEAR…though I didn’t show it off. What is the use of my thirty years of driving experience, I cursed?
FEAR of not getting the driving license I desired to have!
When I drove the vehicle back to the testing center, as I killed the engine, I looked anxiously at the lady inspector to pronounce the four-letter word, I dreaded to hear.
But she said the other four letter word. ‘PASS.’
Gosh!
I felt as though a few pounds of weight was released from my abdomen, and my stomach suddenly became light. I desperately wanted to rush to a restroom.
So, I passed the driving test and I have a license now to drive in the U.S.
At my age 67, I felt it was almost impossible, not to feel FEAR at any age. One may transcend it with sufficient practice, but cannot avoid altogether the emotion of FEAR.
Monday, March 28, 2016
My New E-book: “I want to know about…India, its States and Cities”
My New E-book: “I want to know about…India, its States and Cities”
Living in Tenkasi, during the last several years, I had been interacting with several groups of school children through my Youth Development programs. One impression I had been gaining was that several of these children – even from the matriculation schools - had lacked much awareness about anything outside the immediate place of their living. These rural children’s ideas about India, its several states and cities – with regard to its heredity, culture, history, current status and the future potential are generally perfunctory and need a lot of improvement. I had conducted regular classes on “India, its states and cities” for the children of the government-run middle schools. I had also conducted Quiz competitions on the same topic. These efforts had motivated at least some of these children learn more about our country. Besides, these rural children also suffer due to the lack of an easy access to any comprehensive information about our country, though some information is always available in their text books, in bits and pieces. Not many read newspapers regularly too, thanks to the television media which is loaded too much in favor of commercial film and politics based programs. And, there is also very little motivation or encouragement for knowledge seeking among these rural children.
I had also been traveling to U.S.A regularly. Here, the young children have easy access to information through the internet. They get any information they want. However, there is also a lot of obsession among the children about computer video games and entertainment provided by several websites like YouTube. The children of Non-resident Indian parents too lack much information about India, except those provided to them by their parents. There is a vast amount of information about India on the internet, yet not available comprehensively to the school going children. I have found the children outside India are quite keen to know about India.
These two paradoxes – on one extreme, children have very little knowledge and access to information, and on the other, children wanting to know about India comprehensively – motivated me to think of preparing a comprehensive book on India, its states and cities.
So, I have now come out with a series of books, rather five volumes, under the title: “I Want To Know About…India, its states and cities”. They are comprehensive picture based E-books. I won’t call them exhaustive. They are more introductory. Quite a lot of information and pictures in one place, on India. Yet, something that could motivate the young children to research and find more information on specific areas and topics they would be further interested in, about India.
The first volume, which gives an overview about India is ready for publication. This will be available as an E-book in the next few days. The remaining four volumes will be on Eastern India, Western India, Himalayan India and Central India. I intend to publish all of them in the next couple of weeks. The idea is: the children in India can read these books during their forthcoming annual school vacation. Besides, I also intend conducting Quiz programs on India, its states and cities, for the middle school children in Tirunelveli District, sometime during July, 2016 and this E-book will be handy for them.
I hope the book will be useful to the primary and middle school level children in India and outside. I have kept the introductory price of the E-book at a modest level. Just Rs.100/- per volume. That too, the money I receive, selling these books will go towards social and charitable activities of my L. N. Charitable Trust. Though, the book is a priced edition to begin with, over time, I intend making it available in electronic format at very much subsidized cost for the children of government and government-aided schools in Tamil Nadu. Printing these books might be a very costly affair and I might not venture into it unless some publisher is willing to take it up.
I exhort you all to buy my books and gift it to your children and friends. Books are great gifts to your children.
Please let me know how you felt about the books. Please write to me at: neelkant16@yahoo.com
Best wishes to all children.
T.N.Neelakantan
Friday, February 05, 2016
திகிலூட்டும் அண்டார்ட்டிக்கா - உண்மைக் கதைகள்: பகுதி 2 E – ஷெக்கெல்ட்டனின் கதை
திகிலூட்டும்
அண்டார்ட்டிக்கா
- உண்மைக்
கதைகள்:
பகுதி
2 E – ஷெக்கெல்ட்டனின்
கதை
இறுதிப் போராட்டம்
தென் ஜியார்ஜியாவின்
கரையைத்தான்
அந்த அறுவர் குழு தொட்டார்களேயொழிய
இன்னும்
22 மைல்கள்
கடந்தால்தான்
ஸ்ட்ராம்னெஸ்
என்ற வேல் மீன்கள்
பிடிக்கும்
நிலையத்துக்குப்
போய்ச் சேர முடியும்.
அங்கே போய்ச் சேர தென் ஜியார்ஜியா
முழுவதும்
பரவியிருந்த
மலைகளைக்
கடக்கவேண்டும்.
அதுவரை அந்தப் பாதையை யாரும் கடந்ததாக
சரித்திரம்
கிடையாது.
போகும் வழியில்
எதுவும்
கிடையாது.
சவாலுக்கு மேல் சவால்.
மேக்னிஷ்ஷும் வின்செண்டும் மிகவும் பலவீனப்பட்டு களைத்திருந்தனர். அதனால் அவர்களை அங்கேயே மெக்கார்த்தியின் கவனிப்பில் விட்டு விட்டு மற்ற மூவரும் – ஷேக்கெல்டன், க்ரீன், மற்றும் வொர்ஸ்லி - அங்கிருந்து ஸ்டெராம்னெஸ்சை நோக்கி நடக்கத் தொடங்கினர்.
வழியில் உறைந்த பனி ஆறுகள்,
உயர்ந்த பனிச் சறுக்குகள், பள்ளத்தாக்குகள், நடு நடுவே பனி வயல்கள். 4500 அடி உயரத்திலிருந்து பின்னே திரும்பிப் பார்த்தபோது பனிப் போர்வை அவர்களை சூழத்தொடங்கியிருப்பது தெரிந்தது. இரவோ நெருங்கிக்கொண்டிருந்தது. உயரத்திலிருந்து கீழே பாதுகாப்பாக எங்கேனும் சேர வேண்டும். அவர்களிடன் கூடாரம் அமைப்பதற்கான பொருட்கள் ஏதுமில்லை. படுக்கைகளுமில்லை.
பனிபடர்ந்த உயரத்திலிருந்து கீழே 900 அடி சறுக்கினார்கள். அவர்கள் கொண்டு வந்திருந்த அடுப்பு அணையாமல் இருவர் சூழ்ந்து பாதுகாக்க, மூன்றாமவர் சூடான உணவை தயாரித்தார். இப்பொழுது முழுவதும் இருட்டு சூழ்ந்துகொண்டது. தொடர்ந்து நடந்தார்கள். விரைவில் சந்திரன் தென்பட்டான். மீண்டும் மலையேற்றம், உடலில் வலிமையை இருத்திக்கொள்ள இன்னொரு முறை சூடான உணவு.
தூரத்தில் ஒரு தீவு தென்பட்டது. அப்பொழுதுதான் புரிந்தது, தவறான பாதையில் வந்து விட்டோம் என்று. வந்த வழியே மீண்டும் மலைப்பாதைகளில் திரும்பினார்கள்.
காலை 5 மணி. சோர்ந்து போய் ஒருவரையொருவர் குளிருக்காக கட்டிக்கொண்டு அங்கேயே ஒரு பாறையில் அமர்ந்தனர். வொர்ஸ்லியும், க்ரீனும் கொஞ்சம் கண்ணயர்ந்தனர். அதிக நேரம் தூங்கிவிட்டால் பின் யாராலும் ஒரு அடிகூட எடுத்து வைக்கமுடியாது என்பதை உணர்ந்த ஷேக்கெல்ட்டன் ஐந்தே நிமிடங்களில் அவர்களை எழுப்பி விட்டார். மீண்டும் நடைப் பயணம் தொடர்ந்தது.
இன்னும் ஒரே ஒரு மலையிடுக்குதான் பாக்கி. அதை கடந்து விட்டால் ஸ்ட்ராம்னெஸ் போய்ச் சேர்ந்துவிடலாம்.
காலை 6.30 மணிக்கு ஷேக்கெல்ட்டன் ஒரு உயரமான இடத்திலிருந்து கீழே கண்காணித்ததில் ஒரு
நீராவி விசில் சத்தம் கேட்டது போலிருந்தது. காலை வேளைகளில் மீன் பிடிப்பவர்கள எழுப்புவதற்காக அப்படி ஒரு நீராவி விசில் சத்தத்தை எழுப்புவார்கள் என்பது அவருக்குத் தெரியும்.. உடனே ஓடி வொர்ஸ்லியிடமும், க்ரீனிடமும் 7 மணிக்கு மீண்டும் விசில்
சத்தத்தை கவனிக்க வேண்டும் என்றார். 7 மணிக்குத்தான் மீன் பிடிப்பவர்கள் வேலைக்கு கிளம்புவார்கள்.
சரியாக 7 மணிக்கு மீண்டும் அந்த நீராவி விசில் சத்தம் கேட்டது. மனிதர்கள் வாழுமிடத்துக்கு வந்து விட்டோம் என்று அந்த மூவருக்கும் ஒரே மகிழ்ச்சி.
2000 அடி உயரத்திலிருந்து மீண்டும்
நடந்தனர். செங்குத்தான பனிப்பாறைகளில் கயிறுகள் கட்டி இறங்கினர்.
வேறு சில இடங்களில் சறுக்கி கீழிறங்கினர். பனி சூழ்ந்த மலைகளில் ஏறுவதும், இறங்குவதுமாக பயணம் அப்படி இறுதி நேரத்திலும் அவர்களை வாட்டியது.
பல இடங்களில் மலைச் சறிவுகள் அவர்களை ஏமாற்றியிருக்கிறது. பல இடங்களில் பின் வாங்கி மாற்று பாதையில் செல்ல வேண்டியிருந்திருக்கிறது.
மதியம் 1.30 மணிக்கு இறுதியாக ஒரு மலை இடுக்கில் ஏறிய போது 2500 அடி கீழே ஒரு சிறிய மீன் பிடிக்கும் படகு கண்ணில் பட்டது. வேகமாக ஓடினார்கள். கரையோரத்தில் பாய்மரக் கப்பல் ஒன்று கண்ணில் பட்டது.
மனிதர்கள் அங்கங்கே நடமாடிக்கொண்டிருந்ததும் தெரிந்தது. மீன் பதப்படுத்தும் தொழிற்சாலையும்
கண்ணில் பட்டது. அறுவரும் ஒருவருக்கொருவர் கட்டி அணைத்தும், கை கொடுத்தும் சாகசப் பயணத்தை
முடிந்து விட்டது போல தங்களைப் பாராட்டிக்கொண்டனர்.
விரைவில் அந்த படகுக்குப் போய் சேர்ந்துவிட வேண்டும். அதற்கு ஒரே வழி மலை வழியே ஓடிக்கொண்டிருந்த ஒரு ஆற்றின் நீரோட்டத்தோடு செல்வதுதான். இடுப்பளவு உறையும் தண்ணீரில்
நடுங்கும் குளிரில் இறங்கி நீந்தினார்கள்.
திடீரென்று ஒரு நீர்வீழ்ச்சியின் இரைச்சல் கேட்டது. அதிலிருந்து தப்பிக்க முடியாது. முப்பது அடி உயர நீர்வீழ்ச்சியில் இரண்டு பக்கமும் பனிப்பாறைகளுக்கு நடுவே செங்குத்தாக விழுவதை தடுக்க முடியாது.
இருந்தும், ஒரு பாறையில் கனமான கயிறைக் கட்டிக்கொண்டு, கயிறைப் பிடித்தவாறே நீர்வீழ்ச்சியில் முதலில் க்ரீனை இறக்கினர். அவர்களில் அவர்தான் அதிக எடையுள்ளவர். கீழே தண்ணீருக்குள் விழுந்தவரை சிறிது நேரம் காணவில்லை. மற்றவர்களுக்கு ‘திக், திக்.’ ஆனால், சிறிது நேரத்திலேயே தண்ணீருக்கு அடியிலிருந்து க்ரீன் வெளியே வந்தார். ’அப்பாடா’ என்றாகியது. அடுத்ததாக ஷேக்கெல்ட்டனும் அதற்கடுத்து வொர்ஸ்லியும் கீழே இறங்கினர். இறங்குவதற்கு முன் தங்களுடன் கொண்டுவந்திருந்த பயண விவரங்களைக் குறிக்கும் குறிப்புப் புத்தகம், அடுப்பு, எல்லாவற்றையும்
நீர்வீழ்ச்சியில் விட்டெறிந்தனர். கீழே வந்த பிறகு அதிர்ஷ்ட வசமாக அவை தண்ணீரிலிருந்து திரும்பக் கிடைத்துவிட்டது.
பல விதமான கருவிகளை பொருத்திய நல்ல படகுகளுடன் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் கிளம்பிய அவர்களது ஆய்வுப் பயணம் மிகுந்த இன்னல்களுடன், வெற்று வயிற்றோடு ஆனாலும் உயிர் பிழைத்து முடிவடைந்தது.
வேல் மீன் பிடிக்கும் நிலையம் ஒன்றரை மைல் தூரமே இருந்தது. தங்களின் தோற்றத்தை அங்கு செல்லுமுன் சரி செய்துகொள்ளலாம் என்று நினைத்தனர்.
இருந்தும் சிக்கலடைந்த நீள தாடி, மீசை, தலைமுடி, ஒரு ஆண்டுக்கு மேல் துவைக்காத கிழிந்த, அழுக்கடைந்த உடைகளை வைத்துக்கொண்டு அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை.
மே 20, 1916 மதியம் 3 மணிக்கு ஸ்ட்ரோம்னெஸ் வேல் மீன் பிடிக்கும் நிலையத்துக்கு வந்து சேர்ந்தனர். இரண்டு சிறுவர்களை அவர்கள் சந்தித்தார்கள். மேலதிகாரி எங்கே இருக்கிறார் என்று அந்த சிறுவர்களிடன் ஷேக்கெல்ட்டன் கேட்டார். ஆனால் அந்த சிறுவர்கள் பதில் சொல்லாமல் ஒரே குதியாக குதித்து அங்கிருந்து ஓடிவிட்டனர். அவர்களைப்
பின் தொடர்ந்து படகுத்துறைக்கு அருகே இருந்த ஒரு வீட்டில் மேலதிகாரியை பற்றி விசாரித்தனர்.
சொரையில் என்ற
மேலதிகாரி வெளியே வந்தார். ஷேக்கெல்ட்டனும் சொரையிலும் ஒருவரையொருவர் உற்றுப் பார்த்துக்கொண்டனர்.
“என்னைத் தெரியவில்லையா?”
என்று ஷெக்கெல்ட்டன் அவரிடம் கேட்டார்.
சொரையிலுக்கு கேட்ட குரலாக இருந்தது.
‘ஏன் பெயர்
ஷேக்கெல்ட்டன்’ என்று தன்னை மீண்டும் அறிமுகப்படுத்திக்கொண்டார். உடனேயே ஷேக்கெல்ட்டனை அடையாளம் கண்டுகொண்ட சொரையில்
அவரை உடனேயே வீட்டுக்குள் அழைத்தார்.
சொரையில் வீட்டிலேயே குளித்து, சவரம் செய்துகொண்டு, சாப்பிட்டு நன்கு தூங்கினர்.
பின்பு வொர்ஸ்லி மட்டும் இன்னொரு படகில்
தென் ஜியார்ஜியாவில் கிங் ஹாக்கன் குடாவில் தங்கிவிட்ட
மற்ற மூவரை காப்பாற்ற கிளம்பினார். திரும்பும் வழியில் பலத்த பேய்க் காற்று, புயலை சந்திக்க நேர்ந்தது. அந்தப் புயல் மட்டும் ஒரு நாள் முன்னதாக வந்திருந்தால் ஸ்ட்ராம்னெஸ்ஸை கடக்க வந்த குழுவின் எல்லாருமே காப்பாற்றப்படாமலேயே இறந்து போயிருப்பார்கள். எலிஃபென்ட் தீவில் தங்கிய மீதமுள்ளவர்களின் கதியும் அதேதான் ஆகியிருக்கும்.
ஷேக்கெல்ட்டன் ஸ்ட்ரோம்னெஸ்ஸிலேயே தங்கி எலிஃபென்ட் தீவில் தங்கியவர்களை எப்படி பாதுகாப்பாக மீட்பது என்பதைப் பற்றி திட்டமிட்டு கொண்டிருந்தார்.
இறுதி மீட்பு முயற்சி
பின்பு மே 23, 1916 அன்று ஷேக்கெல்ட்டன், வொர்ஸ்லி மற்றும் க்ரீன் மூவரும் குளிர் காலத்தில் பயன்படுத்துவதற்காக வைத்திருந்த இங்கிலாந்தைச் சேர்ந்த
‘சதர்ன் ஸ்கை’ என்ற மீன் பிடிக்கும் படகில் மீதியிருந்த 22 பேரை காப்பாற்ற
நம்பிக்கையுடன் எலிஃபென்ட் தீவை நோக்கிச் சென்றனர்.
போகும் வழியில் எலிஃபென்ட் தீவுக்கு அறுபது மைல்களுக்கு முன்னே பனிப்பாறைகள் மீண்டும் அவர்களை மேலே செல்லவிடாமல் தடுத்ததால் ஃபாக்லாந்து தீவுக்கு படகைத் திருப்பினர். அங்கே உருகுவே நாட்டு அரசுதவியுடன் இன்னொரு டிராலர் வகைப் படகைப் பெற்றுக்கொண்டு கிளம்பினர். அதுவும் பனிப்பாறைகளில் போக முடியவில்லை.
பின்பு தெற்கு சிலி பகுதியிலிருந்த புண்டா ஏரெனஸ் என்ற இடத்துக்குச் சென்றனர். அங்கே இங்கிலாந்தைச் சேர்ந்தவர்களும் சிலி நாட்டைச் சேர்ந்தவர்களும் இன்னொரு பலமான படகை வாடகைக்கு அமர்த்திக்கொள்ள அவர்களுக்கு
ஆயிரத்தைநூறு பவுண்ட் பணம் நன்கொடையாக கொடுத்தனர்.
எலிஃபென்ட் தீவுக்கு சுமார் நூறு மைல் வடக்கே அந்தப் படகின் துணை இன்ஜின் பழுதடைந்து உடைந்து விட்டது. மூன்று முறை முயன்றும் அவர்களால் எலிஃபென்ட் தீவுக்கு போக முடியவில்லை.
இருந்தும் ஷேக்கெல்ட்டன் மனம் தளரவில்லை.
சிலி நாட்டு அரசாங்கத்துடன் பேசினார். சிலி அரசாங்கம் லூயிஸ் அல்பெர்ட்டோ பர்டோ என்ற மாலுமியின் தலைமையில் ‘யெல்ச்சோ’ என்ற நீராவிப் படகை கொடுத்து உதவினர். அந்த நீராவிப் படகு எலிஃபென்ட் தீவை நெருங்கியது.
ஆகஸ்ட் 30, 1916
அந்தத் தீவில் இருந்தவர்களுக்கோ மதிய உணவு நேரம்.
தலை கீழாகக் கவிழ்த்துப் போட்டு கூடாரமாக்கிக் கொண்ட படகுகளுக்குள் முடங்கிக் கிடந்தனர். அவர்களில் ஒருவரான மார்ஸ்டன் என்பவர் வெளியே வந்த போது ‘யெல்ச்சோ’ படகை கண்டுவிட்டார். ‘படகு வந்து விட்டது, படகு வந்து விட்டது’ என்று கத்தி வானத்துக்கும் பூமிக்குமாக குதித்தார். அவர் கத்தியதைக் கேட்ட, ஒரு சிலர் உணவு தயாராகிவிட்டதை அறிவிப்பதற்குத்தான் மார்ஸ்டன் அறை கூவுகிறார் என்று நினைத்து கூடாரத்திலிருந்து வெளியே வந்தனர். மார்ஸ்டன், ‘படகு, படகு’ என்று மீண்டும் மீண்டும் கத்துவதை தெளிவாக கேட்டபோது மற்ற எல்லோரும் கூட ஒரே சமயத்தில் கூடாரத்தை விட்டு வெளியே வர முயற்சித்ததில்
நெரிசலில் கூடாரத்தின் துணிகள் கிழிந்து விட்டன.
அந்தப் படகுக்கு தாங்கள் இருப்பதை தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காக கூடாரத்தின் எல்லாத் துணிகளையும் கிழித்தெடுத்து கடைசியாக இருந்த ஒரு டின் எண்ணையில் அவற்றை முக்கியெடுத்து தீ வைத்துக் கொளுத்தினர்.
படகு கரைக்கு வந்ததும், ஃப்ரான்க் வொயில்ட் ஷேக்கெல்ட்டனை கீழே இறங்கி வந்து அதுவரை தாங்கள் எப்படி அத்தனை நாட்களையும் கழித்தோம் என்பதைக் காட்டுவதற்கு அழைத்தார். ஆனால், எல்லோரும் நலமாக இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்ட ஷேக்கெல்ட்டன் அவர்களை பாதுகாப்பாக மீட்டுச் செல்வதிலேயே குறியாக இருந்ததால் உடனேயே கிளம்பவேண்டும் என்று கூறி மறுத்து விட்டார். பருவனிலை எப்பொழுது எப்படி மாறுமோ தெரியாது. எந்த நேரத்தில் எந்த இக்கட்டு வருமோ தெரியாது.
ஒரு மணி நேரத்தில் எல்லோரும் ஷேக்கெல்ட்டன் கொண்டு வந்த படகில் ஏறிக்கொண்டனர். படகு வடக்கு நோக்கி நகரத் தொடங்கியது.
எலிஃபென்ட் தீவில் வொயில்ட் தலைமையில் தங்க நேர்ந்தவர்கள் அக்டோபர் 1914 முதல் ஆகஸ்ட் 1916 வரை வெளி உலகத்தைப் பற்றி எதுவும் தெரிந்து கொள்ளாமல் எப்படியோ உயிர் வாழ்ந்திருக்கிறார்கள்.
அந்தத் தீவில் 137 நாட்கள் எப்படியோ உயிர் பிழைத்திருக்கிறார்கள்.
ஷேக்கெல்ட்டன் அவர்களை அந்த தீவில் விட்டுச் சென்று 128 நாட்கள் ஆகியிருக்கின்றன.
அதிசயம் என்னவென்றால் ஷேக்கெல்ட்டன் குழுவினரில் 28 பேரில் ஒருவர் கூட உயிர் இழக்கவில்லை. அவர்களின் ‘என்டியூரன்ஸ்’ கப்பல் கடலுக்குள் போய் விட்டது. ‘ஜேம்ஸ் கெயிர்ட்’ படகு மட்டும் பின்னால் இங்கிலாந்துக்கு திரும்பக் கொண்டு வரப்பட்டது. இன்றும் லண்டனில் ‘டல்விச்’ கல்லூரியில் பார்வைக்காக வைத்திருக்கிறார்கள். ஜேம்ஸ் கெயிர்ட் சொசைட்டி என்ற பெயரில் ஷேக்கெல்ட்டன் நினைவாக இன்றும் செயல்பட்டு வருகிறது.
ஷேக்கெல்ட்டனின் முடிவு
1921-ல், ஷேக்கெல்ட்டனை மீண்டும் அண்டார்ட்டிக்கா பயணத்துக்கு அழைத்தார்கள். 2000 மைல் நீளமான கடற்கரையின் வரைபடங்கள் தயாரிப்பதற்காகவும், பருவ நிலை மற்றும் புவியியல் ஆராய்ச்சிக்காகவும் இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டது.
ஷேக்கெல்ட்டனுக்கு 47 வயதுதான். இருந்தும் இந்தப் பயணத்தின் போது ‘க்வெஸ்ட்’ கப்பல் தளத்தில் தெற்கு ஜியார்ஜியாவின் கிங் எட்வர்ட் கோவ் என்ற இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பொழுது மாரடைப்பால் இறந்து போனார். அங்கேயே அவரது உடலும் புதைக்கபட்டது. 1928-ல் ஸ்காட்லாந்திலிருந்து கொண்டு வரப்பட்ட க்ரானைட் கல்லால் அவர் புதைக்கப்பட்ட இடத்தில் தலைக்கல் அமைக்கப்படது. பல விஞ்ஞானிகள் இன்றும் அவரது நினவுச் சின்னத்தை பார்வையிட வந்துகொண்டிருக்கின்றனர்.
முடிவுரை
ஒரு தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கும், பயங்கரமான இக்கட்டான நிலைகளிலும் மனவலிமையுடன் எப்படிப் போராடி வெற்றி பெற முடியும் என்பதற்கும், துணிகரமான வீர சாகசத்துக்கும் ஷேக்கெல்டன் ஒரு முன்மாதிரியாக சரித்திரத்தில் நிற்கிறார்
சரித்திரப் புகழ் பெற்ற ஷேக்கெல்ட்டனின் அண்டார்ட்டிக்கா பயணம் நடந்து 2016 ஆண்டோடு 100 ஆண்டுகள் ஆகிறது. இந்தக் கட்டுரையை ஷேக்கெல்ட்டனுக்கும் அவருடன் பயணித்த 22 வீரர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன்.
இந்தக் கட்டுரையை எழுதுவதற்கு மிகவும் உதவியாக இருந்த வலைப் பதிவுகளுக்கு நன்றி.
ஆதாரம்:
முந்தைய பகுதிகளுக்குச் செல்ல:
Subscribe to:
Posts (Atom)