திகிலூட்டும்
அண்டார்ட்டிக்கா
- உண்மைக்
கதைகள்:
பகுதி
2 B – ஷெக்கெல்ட்டனின்
கதை
ஆகஸ்ட், 2014
2014,
ஆகஸ்ட் 8-ஆம் தேதி ‘என்டியூரன்ஸ்’ கப்பல் ‘ப்யூனெஸ் ஏர்ஸ்’ மற்றும் அண்டார்ட்டிக்காவின் கிளைத் தீவான தெற்கு ஜியார்ஜியா வழியாக அண்டார்ட்டிக்காவுக்குக் கிளம்பியது. போர் அதிக நாட்கள் நீடிக்காது
என்ற நம்பிக்கையுடன் ஷேக்கெல்ட்டனுடன் 28 நபர் அடங்கிய குழு உற்சாகத்துடன் கடலுக்குள்
சென்றது.
தெற்கு ஜியார்ஜியாவில் நார்வே நாட்டுக்காரர்களின் வேல் வகை மீன்களைப் பிடிக்கும் நிலையம் அமைந்திருந்தது.
நவம்பர், 2014
மூன்று மாதங்களுக்குப் பிறகு நவம்பர் 5-ஆம் தேதி தெற்கு ஜியார்ஜியாவை ஷேக்கெல்ட்டன் குழு சென்றடைந்தது. அங்கு, தெற்கு ஜியார்ஜியாவுக்கும் வெடல் கடலுக்கும் நடுவே அந்த ஆண்டு வழக்கத்துக்கும் அதிகமாக பனிப்பொழிவு கொட்டியிருப்பதாக மீன் பிடிக்கும் நிலையத்திலிருந்தவர்கள் மூலமாக அறிந்தனர். தெற்கு ஜியார்ஜியாவில் மேற்பயணத்துக்குத் தேவையான கூடுதலான உடை, உணவுப் பொருட்களை சேகரித்துக்கொண்டு ஒரு வாரத்தில் கிளம்புவதாகத்தான் ஆரம்பத்தில் ஷேக்கெல்ட்டன்
திட்டமிட்டிருந்தார். ஆனால், அதிக பனிப்பொழிவின் காரணமாக ஏற்பட்ட பனி விலகுவதற்கு கூடுதலாக நேரம் கொடுக்க வேண்டியிருந்ததால்
தென் ஜியார்ஜியாவிலேயே ஒரு
மாதம் தங்கவேண்டியிருந்தது. அந்த ஒரு மாத காலத்தில் ஷேக்கெல்ட்டன் குழுவினருக்கும் நார்வே நாட்டின் மீன் பிடிப்பவர்களுக்குமிடையே நல்ல நட்பு ஏற்பட்டது. அந்த நட்பு பின்னால் அவருக்கு மிக உதவியாக இருந்தது.
வெடல் கடல் பொதுவாக பனிக்கட்டியாக உறைந்தே காணப்படும். பனிப்பாறைகளைத் பிளந்துகொண்டு கடலில் செல்ல கப்பலின் இஞ்ஜினுக்கு அதிக சக்தி தேவைப்படும் என்பதால் ‘என்டியூரன்ஸ்’ கப்பலின் ஒரு தளம் முழுவதும் நிலக்கரியை ரொப்பிக்கொண்டனர்.
டிசம்பர் 5-ஆம் தேதி தெற்கு ஜியார்ஜியாவை விட்டு ஷேக்கெல்ட்டனின் குழு கிளம்பியது
ஜனவரி 18, 1915
வழியில் ஆயிரம் மைல் தூரத்தை ஆறு வார காலத்தில் பனிக்கட்டிகளோடும் பனிப் பாறைகளோடும் போராடி அவருடைய இலக்கு நூறு மைல் தூரமே இருந்தது என்ற நிலையில், ஜனவரி 18, 1915 அன்று முழுவதுமாக பனிப்பாறைகளால் சூழப்பட்டு மேலே செல்ல முடியாமல் ‘என்டியூரன்ஸ்’ கப்பல் நின்றுபோனது. மேலும் வெட்பநிலையும் ஒரேயடியாக கீழிறங்கி ஏற்கெனவே விழுந்திருந்த பனிப்பொழிவையையும் இறுக்கிவிட்டது.
அது போன்று அண்டார்ட்டிக்கா கடலில் பனிப்பாறைகளுக்கு
நடுவே மாட்டிக்கொள்ள நேரிடும் என்பது ஏற்கெனவே எதிர்பார்க்கப்பட்டதுதான் என்றாலும்
ஷேக்கெல்ட்டனுக்கு
அது ஒரு பெரிய பின்னடைவுதான்.
இங்கிலாந்தின் ‘ராயல் நேவி’யில் பணி புரிந்தவர்களும், கடற்பயணத்திலேயே காலம்
கழித்து உடம்பை முறுக்கேற்றிக்கொண்ட சக மாலுமிகளும், பல்கலைக் கழக மாணவர்களும் அடங்கிய என்டியூரன்ஸ் கப்பலின் குழுவினர் ஷேக்கெல்டனின் தலைமையை நம்பியிருந்தார்கள். எப்படி
மேலே போவது என்று அவர்தான் தீர்மானிக்க
வேண்டும், வழிகாட்ட வேண்டும்
கப்பல் பனிப்பாறைகளில் மாட்டிக்கொண்டது
மட்டுமில்லாமல் மிதக்கும் பனிக்கட்டிகளில் தெற்குப் பக்கமாக
நகரவும்
தொடங்கியது.
பனிப்பாறைகளில அடிக்கடி வெடிப்பு
ஏற்படும். அப்படி வெடிப்பு ஏற்பட்ட பொழுது
அவைகளிலிருந்து
விடுபட அவர்கள் எடுத்த
முயற்சிகளும்
வெற்றி பெறவில்லை.
கப்பலை சுற்றியிருந்த
பனிப்பாறைகள்
கற்கள் போலக் கடினமானவைகளாகவும்
தடிமனாகவும்
இருந்தன.
பலம் வாய்ந்த
கைகள் கொண்டு பனிக்கட்டிகளை
உடைத்தெடுக்கவும் முடியவில்லை.
கப்பல் தொடர்ந்து
கடலில் மிதந்து
விலகிப் போய்க்கொண்டிருந்தது.
பிப்ரவரி இறுதி, 1915
பிப்ரவரி இறுதியில் பருவ நிலை
இன்னும் மோசமாகியது. வெட்பம் இன்னும் -20 டிகிரிக்கு குறையத் தொடங்கியது. குளிரில் கப்பல் நன்றாகவே உறைந்து விட்டது. கப்பல் எவ்வளவு தூரம் விலகிச் செல்லும்
என்பது தெரியவில்லை. குளிர்காலம் முடிந்துவிட்டால் பனியை உடைத்தெடுக்க முடியுமா என்றும்
தெரியவில்லை.
கவலைகளின்
மேகங்கள் குழுவை சூழ்ந்தன.
கப்பலின் பக்கவாட்டிலுள்ள பனிக்கட்டிகளை நீக்கிவிட்டால், அருகிலுள்ள மற்ற பனிக்கட்டிகள் கப்பலை நெருக்கும்பொழுது கப்பல் பனிக்கட்டிகளுக்கு மேலே கொஞ்சம் உயர்ந்து நகர ஆரம்பிக்கலாம் என்று எதிர்பார்க்காததால்
கப்பல் குழுவினருக்கு
ஏமாற்றம்,
விரக்தி
ஏற்படத்
தொடங்கியது.
நேரத்தைப் போக்குவதற்கு கால்
பந்து, ஹாக்கி விளையாட்டுக்களை பனிக்கட்டிகளின் மீது தினமும்
இருட்டும் நேரம்
வரை விளையாடினர்.
ஜூலை மாதம்
வரை அப்படியே
நாட்கள்
நகர்ந்துகொண்டிருந்தன.
ஜுலையில் சூரியன்
மெதுவாகத் தோன்றத்
தொடங்கினான்.
ஆனால் பருவநிலை
அடிக்கடி
மாறிக்கொண்டேயிருந்தது,
பனித்துகள்களுடன்
கூடிய சூறைக்காற்று
(blizzards) அடிக்கடி
வீசத் தொடங்கியது.
மெல்லிய பனிக்கட்டித்
தகடுகள்
ஒன்றுக்கு
மேல் ஒன்றாக மிதந்து வந்து
கப்பலைத்
தாக்கின. ஒரு புறம் கப்பல் 10-15 அடி உயரத்தில்
மிதந்து
கொண்டிருந்தது.
இன்னொரு
புறம் பனிக்கட்டிகளின்
தகடுகள்
ஒன்றுக்கொன்று
எதிர் திசையில் நகர்ந்து கொண்டிருந்தன. இரண்டுமாக
சேர்ந்து
ராட்சச அலைகளின்
இரைச்சலை
ஏற்படுத்தின.
கப்பலில்
இருந்தவர்கள்
மீத இருந்த
உணவை சேமிக்கும்
பொருட்டு
மிருக வேட்டையில் இறங்கினர். சீல்,
பெங்குயின்
போன்றவை
குறைவாகவே
காணப்பட்டன.
அக்டோபர், 1915
என்டியூரன்ஸ்
கப்பல் பனிக்கட்டிகளின்
பிடியிலிருந்து
இன்னும் விடுபடவில்லை.
கடலின் மேலே மிதந்து செல்லாமல்,
பனிக்கட்டிகளூடேயே
தத்தளித்து ஊர்ந்து
நகர்ந்தது
கப்பலின்
பின்புறக்
கம்பம் நின்ற பலகைகள்
வளைந்து
உடைய, கப்பலுக்குள்
தண்ணீர்
கசியத் தொடங்கியது.
தற்காலிமாக
அதை சரி செய்தனர்
என்டியூரன்ஸ்
கப்பல் 1186 மைல் தூரம் கடலில் அலைந்து
திரிந்து
விட்டது.
பனிப்பாறைகளில்
மாட்டிக்கொண்டு
281 நாட்கள்
கடந்து விட்டன. உணவும், தங்குமிடமும் கிடைக்க வேண்டுமானால் 346 மைல் தொலைவிலிருக்கும்
பாலெட் தீவுகளுக்குத்
தான் போக வேண்டும்
என்ற நிலை. கப்பலை கை கழுவி விட்டுத்தான்
ஆக வேண்டும். நம்பிக்கை தளர்ந்து விட்டது. கப்பலில் தன்னுடன் வந்தவர்களோடு எங்கேனும்
பாதுகாப்பாக
போய்ச் சேர்ந்தாலே
போதும் என்ற நிலை ஷேக்கெல்ட்டனுக்கு.
ஷேக்கெல்டனுக்கே
தடுமாற்றம்.
No comments:
Post a Comment